இயந்திரங்களால் முடியாமல்
வடித்த எங்கள்
கண்ணீரால்
துளை நிரம்பி
மிதந்து நீ மேலே
வந்தாயோ தம்பி?
ஆழப் புதைந்த உன்னை
அகழ்ந்து எடுத்தது
சற்றே
மேலே புதைக்கவா
செல்வமே?
(செய்தி 24/02/2009) : ஆண்டிப்பட்டியில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, பல இயந்திரங்கள் கொண்டு 2 நாட்கள் முயன்று இறுதியில் இறந்த நிலையில் உடலை மீட்டனர்)
3 comments:
கண்ணீர் சிந்த வைக்கும் கவிதை. தன் மகனின் மரணத்தை 48 மணி நேரங்களில் படிப்படியாய் உணர்ந்த பெற்றோரின் தவிப்பினை அழகாக சில வரிகளில் சொல்லி விட்டீர்கள்.
இன்னும் பலப்பல இது போல் படைக்க வாழ்த்துகிறேன்.
சமுதாய நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து கவிதை படைப்பது பாராட்டத்தக்கது.செய்தியில் பார்த்து கண்ணீர் விட்ட சம்பவம்,அந்த பிஞ்சு குழந்தையின் சவத்தை பார்த்த போது விதியை நோவதா?அல்லது குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியாமல் போனதே அந்த இயலாமையை நோவதா?
Post a Comment