skip to main
|
skip to sidebar

(ஒரு முன் குறிப்பு - ஜேட் கூடி(Jade Goody)(5 ஜூன் 1981– 22 மார்ச் 2009) ஒரு ஆங்கில தொலைக்காட்சி பிரபலம். 2007ல் celebrity Big brother என்ற லண்டன் தொலைக் காட்சியின் உண்மை நிகழ்வுக் காட்சி (reality show)வில் இந்திய திரைப் பட நடிகை சில்பா க்ஷெட்டி உட்பட பல ஆங்கில பெண்களுடன் ஒரே கண்ணாடி அறையில் சில நாட்கள் உலகம் உற்று நோக்க வாழும் நிகழ்ச்சியில் நிற வெறி கொண்டு சில்பாவிடம் மோசமாக நடந்ததை கண்டு உலகமே கண்டித்தது. ஆனால் அவரே தன் தவறை உணர்ந்து இந்தியா வந்து மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் வாழ்க்கையில் விதி விளையாடியது. திடீரென்று தாக்கிய புற்று நோய் காரணமாக இறந்தார்)
மரணத்தின் வர்ணம்ஆருயிர்த் தோழியே
நான்தான் சில்பா
அன்று நடந்ததை
அன்றே மறந்தேன்
இன்னொரு சந்தேகம்
இன்று எனக்கு
மரணத்தின் நிறம்
கறுப்பா வெள்ளையா
உன்னைக் கேட்டால்
உண்மை தெரியும்
கனவில் வந்து சொல்வாயா
கண்ணே ஜேட் கூடி ?
4 comments:
இன்னொரு சபாஷ்
முந்திய கவிதை போல, கவிதையை முதலில் போட்டு விட்டு, பின் செய்தி போட்டால் நன்றாக இருக்கும்.
நானும் ஜேட் செய்தியை டிவியில் பார்த்தேன்,அவர் இறக்கும் முன்பு ஹாஸ்பிடலில் மொட்டையுடன்.மரணம் வெகு தொலைவில் இல்லை என்பதை விளக்கியது இந்த கவிதை.
அது மட்டுமல்ல
மரணம்
கறுப்பு வெள்ளை
நட்பு பகைமை
செழுமை வறுமை
இன்ன பிற பேதங்களையும்
இல்லாமல் செய்து விடுகிறது
Post a Comment