ஆப்பிள் சுவையானது, உடலுக்கு ஆரோக்கியமானது எல்லாம் சரி ஒரு ஆப்பிளை வைத்து மனிதனையும் இறைவனையும் வேறு படுத்திக் காட்ட முடியுமா?
என்ன வெறும் ஒரு ஆப்பிளை வைத்து எப்படி இவ்வளவு பெரிய தத்துவத்தை விளக்க முடியும்?
முடியும், விளக்கினார் ஒரு மகான். சரி அதைத்தான் சட்டென்று கூறுங்களேன்.
பொறுமை, பொறுமை. கேட்டவுடன் கிடைக்கும் எதற்கும் அது எவ்வளவு அவசியமானதாக இருந்தாலும் அதன் மதிப்பு குறைவுதான்.
இறைவன் கூட தன் மதிப்பைக் குறைத்துக் கொள்ளக் கூடாது என்று தான் மனிதனின் பிரார்த்தனைகளை சிறிது காலம் தாழ்த்தி நிறைவேற்றுகிறானோ?
இறைவனின் மதிப்பை யாரும் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்று தெரியாதா?
தெரியும் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். சரி இப்போதாதாவது சொல்லக்கூடாதா?
சொல்கிறேன்.ஒரு ஆப்பிளில் எத்தனை விதை உள்ளது என்று எண்ணிச் சொல்ல மனிதனால் முடியுமா?
பூ இது என்ன பிரமாதம்? நானே சொல்லி விடுவேனே, மாதுளையா கொய்யாவா அவைகளைக் கூட சிறிது மெனக்கெட்டால் எண்ணி விடலாம்.
கேள்விக்கு பதில் இதுதான், மனிதனால் ஒரு ஆப்பிளில் எத்தனை விதைகள் என்று எண்ண முடியும், ஆனால் இறைவனால் மட்டுமே ஒரு விதையில் எத்தனை ஆப்பிள்கள் உள்ளதென்று கூற முடியும்.
ஆஹா, எவ்வளவு பெரிய உண்மை?
ஆமாம், இதில் இன்னும் பல ஆழமான தத்துவங்களும் உண்டு அவைகளைச் சொல்லித் தெரிவதை விட ஒவ்வொருவரும் உணர்ந்துதான் புரிந்து கொள்ள முடியும்.
2 comments:
கசப்பு விதையில் ஒரு இனிப்பு செய்தி இது தானா?எல்லோருக்கும் தெரிந்ததுதான்.எடுத்து சொல்லவும் தெரிய வேண்டுமல்லவா?ரசிக்கும்படி எழுதி இருக்கீங்க.எல்லோரையும் ஊக்குவிப்பது எனக்கு பிடிக்கும்.
நன்றி சகோதரி
தங்கள் ஊக்கம்
உண்மையாகவே
எனக்கொரு
இனிப்புச் செய்தி
Post a Comment